Magazine » Tamil » ப்ரா அளவு கால்குலேட்டர் — இரண்டு எளிய முறையில் உங்கள் ப்ரா அளவை அளக்க

ப்ரா அளவு கால்குலேட்டர் — இரண்டு எளிய முறையில் உங்கள் ப்ரா அளவை அளக்க

80% இந்திய பெண்கள் சரியான பொறுத்தமில்லாத ப்ராக்களை அணிகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? நல்ல நேர்த்தியாக பொருந்தும் ப்ரா நல்ல தோற்றத்துக்கு மட்டும் முக்கியம் அல்ல, சரியான தோரணையை தீர்மானிப்பத்திலும், தேவையான சப்போர்ட் தருவதிலும் முக்கியமானது. சரியான பொறுத்தமில்லாத பிராக்களுக்கு முக்கியமான காரணம் பெரும்பாலான பெண்கள் அவர்களின் ப்ரா அளவை அளந்து வாங்குவதில்லை. உங்களின் சரியான ப்ரா அளவை தெரிந்து கொள்வது தான் சரியான பிட்டிங் ஆனா ப்ராவை தேர்ந்தெடுப்பதற்கான முதல்  படி.  ப்ரா அளவை அளப்பது ஒன்றும் பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லை. உங்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு அளக்கும் டேப் மற்றும் ஒரு கண்ணாடி மட்டுமே. மேலும், நீங்கள் நல்ல ஒரு பிட் ஆனா துடுப்பு இல்லாத ப்ரா அணிந்திருக்க வேண்டும்.

இதோ ப்ரா அளவு கால்குலேட்டரை வைத்து உங்கள் ப்ரா அளவை தெரிந்து கொள்ளும் வழிகள் 

ஸ்டெப் 1.  பேண்ட் அளவை கணக்கிடுங்கள் 

  • டேப் சமமாகவும் சரியான பிட் ஆகவும் இருக்க வேண்டும். 
  • டேப்பில் காட்டும் எண்ணை அடுத்து உள்ள முழு எண்ணிற்கு மாற்றவும். அந்த எண் இரட்டை படை எண்ணாக இருப்பின் 4 இன்ச்ஸ் கூட்டி கொள்ளவும். ஒரு வேலை அந்த எண் ஒற்றைப்படை எண்ணாக இருப்பின் 5 இன்ச்ஸ் கூட்டி கொள்ளவும்.
  • இந்த கணக்கீட்டின் கூட்டு தொகையே உங்கள் பேண்ட் அளவு.
ब्रा बैंड

எ. க: 25.6 இன்ச்ஸ் அதனுடைய அடுத்த முழு எண்ணுக்கு மாற்றபட்டு 26 பேண்ட் அளவு- 26 + 4 = 30

ஸ்டெப் 2. மார்பக அளவு/கப் அளவு கணக்கிடுங்கள் 

  • டேப்பை உங்களது முழு மார்பகத்தையும் சுற்றி இருக்குமாறு சுற்றி கொள்ளவும்.
  • மிகவும் இறுக்கமாகவும் அல்லது மிகவும் லூசாகவும் இல்லாமல் எந்த வித தொய்வும் முருக்களும் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • டேப்பில் காட்டும் எண்ணை அடுத்து உள்ள முழு எண்ணிற்கு மாற்றவும்.
  • இப்பொழுது முதலில் கண்டுபிடித்த பேண்ட் அளவை இப்பொழுது கணக்கிட்ட மார்பக அளவில் இருந்து கழிக்கவும்.
बस्ट के साइज़

எ. க : மார்பக அளவு  = 37 இன்ச்ஸ், பேண்ட் அளவு = 34 இன்ச்ஸ், 37-34 = 3 இன்ச்ஸ். அது 34C!

  • பேண்ட் மற்றும் மார்பக அளவின் வித்தியாசம் 1 என்றால் உங்களுடைய கப் அளவு  A. வித்தியாசம் 2 என்றால் கப் அளவு பேபி அப்படியே போய் கொண்டே இருக்கும்.

உங்களது ப்ரா அளவை அளப்பது எப்படி என்ற வீடியோ செயல்முறை இதோ

இந்திய உடல் வாகு வகைகளுக்கு ஏற்ற உங்கள் சரியான ப்ரா அளவை தேர்வு செய்ய உதவும் விரிவான ப்ரா அளவு அட்டவணை இதோ 

பிரீ சைஸ் — நம்மளுடைய பிரீ சைஸ் உள்ளாடைகள் எல்லாம் பின்னப்பட்ட பொருளால் ஆனது. சைஸ் S முதல் L வரை உடல் உள்ளவர்களுக்கு கட்சிதமாக பொருந்தும்

சரியான ப்ரா அளவை தேர்ந்தெடுக்க நினைவில் கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் 

  • ஒவ்வொரு 3-6 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ப்ரா அளவை சரி பார்த்து கொள்வது நல்லது.
  • உங்கள் ப்ராவின் வார் பட்டைகள் மிகவும் டைட்டாகவும் அல்லது மிகவும் லூசாகவும் இருக்க கூடாது. மேலும் உங்களுக்கு எற்றாற்போல ஏத்தி இறக்க இலகுவாக இருக்க வேண்டும்.
  • உங்கள் கப்கள் உங்கள் மார்பகங்களை முன் பக்கமும் சைடுலயும் நன்றாக மூடி இருக்க வேண்டும்.
  • உங்கள் ப்ரா பேண்ட் மற்றும் நடுபகுதி உங்கள் உடம்பில் தட்டையாக எந்த வித அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • உங்கள் ப்ரா அளவை அளக்கும் முறை தெரிந்திருப்பது மட்டுமே உங்கள் சரியான ப்ரா அளவை தெரிந்து கொள்ள உதவும். அதாவது ஏன் நீங்கள் உங்கள் உடல் அமைப்பிற்கு ஏற்ற ப்ரா வகையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும். அந்த மாதிரி  சந்தர்ப்பத்தில், உங்களுக்கு ஏற்ற ப்ராவை தேர்ந்தெடுக்க எங்கள் பிட் டெஸ்ட்ஐ எடுத்து கொள்ளவும். கிலோவியாவின் இந்திய ப்ரா அளவு கால்குலேட்டர் தான் மிகவும் பயனுள்ளது.

இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமா? அடிக்கடி கேக்கும் கேள்வி பதில் பக்கத்தை பார்க்கவும் 

Q1. ஏன் பெண்கள் ப்ரா அணிய வேண்டும்?

  • மார்பகங்களையும் மற்றும் தோல்பட்டைகளையும் சப்போர்ட் பண்ணுவதற்காக 
  • வடிவத்தையும் மற்றும் தோற்றத்தையும் மேம்படுத்த.
  • மார்பக திசுக்கள் தொங்குவதை தடுக்க.
  • வலி மற்றும் அசௌகரியத்தை தடுக்க.
  • நம்பிக்கையை அதிகரிக்கும்.

Q2. நீங்கள் எப்பொழுது ப்ரா அணிந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள?

சக அழுத்தம் உங்களை ப்ரா அணிந்து கொள்ள வற்புறுத்த கூடாது மாறாக இந்த அறிகுறிகளை தவிர 

  • மார்பக மொட்டுகள் வளரும்போது. அதன் விளைவாக உடலை ஒட்டி இருக்கமான உடை அணியும்போது முளைகாம்புகள் வெளியே தெரிம்போது.
  • வலி மற்றும் விசித்திரமான அசௌகரியம் மார்பகத்தில் ஏற்படும்போது.

Q3. நீங்கள் தவறான அளவு ப்ரா அணியும்போது என்ன நடக்கும்?

நீங்களே உங்களை அளவிற்கு அதிகமான ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடுவீர்கள். அவை என்னவென்றால் 

  • மார்பக திசுக்களில் வலி மற்றும் அசௌகரியம்.
  • வார் பட்டைகள் உங்கள் தோல்பட்டையை அழுத்துவது.
  • முதுகு, கழுத்து மற்றும் தலைவலி.
  • மோசமான  தோரணை.
  • உங்கள் ப்ரா உங்கள் இயக்கத்தை தடைப்படுத்துவது.

Q4. நான் எப்படி என்னுடைய ப்ரா பிட் ஆக இருப்பதாக சொல்வது? ப்ராவின் ஒரு ஒரு பாகத்தை பற்றியும் பார்க்கலாம்.

  • உங்களுடைய ப்ரா வார் பட்டைகளுக்கு நடுவில் இரண்டு விரல்கள் நுழையும் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
  • பின்புற பட்டை மேலே ஏறாமல் நேராக இருக்க வேண்டும்.
  • உங்கள் ப்ராவின் நடுப்பக்கம் உங்கள் மார்புப்பட்டைக்கு எதிராக தட்டையாக இருக்க வேண்டும்.
  • அடி வயர்கள் மார்பகங்களை முழுவதுமாக சுற்றி இருக்க வேண்டும்.
  • உங்கள் மார்பகங்கள் கப்களை விட்டு வெளியே பிதுங்கி கொண்டு வர கூடாது அதே நேரம் கப்களில் அதிகப்படியான இடமும் இருக்க கூடாது.

Q5. நான் என்னுடைய ப்ராவை சரியாக அணித்திருக்கிறேனா?ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து கொள்ளலாம்.

எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பின் வரும் முறைகளை பின்பற்றுகிறீர்களோ அவ்வளவு நல்லது 

  • உங்களுடைய ப்ரா மடிப்பு லூசான ஹூக்கிள் மாட்டியிருக்க வேண்டும்.
  • நன்றாக அழுத்தியும் உள்ளமுக்கியும் கப்களில் இருந்து சப்போர்ட்டை பெற வேண்டும்.
  • ஸ்ட்ராப்களை சரி செய்து ஸ்ணக் பிட் பெறவும்.

Q6. உங்களுடைய மார்பக வடிவத்துக்கேற்ப சரியான ப்ராவை தேர்ந்தெடுப்பது எப்படி?

இங்கே நாங்கள் உங்களுக்காக பல விதமான ப்ரா வகைகளை உங்கள் மார்பக வடிவத்துக்கேற்ப தேர்ந்தெடுக்க சுலபமாக குடுத்துள்ளோம்.

  • சமச்சீரற்ற : பிளஞ்சு ப்ரா 
  • தடகள : ஸ்போர்ட்ஸ் அல்லது ரேஸ்ஸர்பேக் ப்ரா 
  • பெல் : டீஷர்ட் ப்ரா 
  • ரவுண்டு : பால்கனெட் ப்ரா 
  • கீழ்நோக்கி : புஷ் அப் 

Q7. சிஸ்டர் அளவுகள் என்றால் என்ன?

ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உடல் அமைப்பு இருக்கும், சில நேரங்களில் உங்களுக்கு வழக்கமான ப்ரா அளவு அட்டவணை வைத்து துல்லியமான ப்ரா அளவு கிடைக்காது. அந்த சமயங்களில் நீங்கள் சிஸ்டர் சைஸ்களுக்கு மாறிக்கொள்ளலாம். அடிப்படையில், அவை மாற்று ப்ரா அளவுகள். கப் தொகுதி அதே தான், பேண்ட் அளவு மற்றும் கப் எழுத்து மாறினாலும் கூட. உதாரணமாக, நீங்கள் 34B என்றால் உங்களுக்கு 32C அல்லது 36A பொருத்தமாக இருக்கும். 32C யில் சிறிய பேண்ட் அளவு இருக்கும், 36A யில் நீண்ட பேண்ட் அளவு இருக்கும். ஆகவே, உங்களுக்கு எது சிறந்த பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Q8.  எப்படி உங்களுடைய ப்ராவை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்?

ப்ராவை நீண்ட நாட்கள் வருமாறு பயன்படுத்த அவற்றை குளிர்ந்த வெப்ப நிலையில் கைகளில் துவைக்காமல் மெஷினில் துவைக்கவும். இது முக்கியமாக பேட் உள்ள பிராக்களுக்கு. கப்கள் சிதையாமல் இருக்க உள்ளாடை பைகளை பயன்படுத்தவும்.

Q9.  நீங்கள் எப்பொழுது உங்கள் ப்ராக்களை மாற்ற வேண்டும்?

சராசரியாக ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடத்தில் உங்கள் உபயோகத்தை பொறுத்து உங்கள் ப்ராக்களை மாற்ற  வேண்டும். நீங்கள் தினமும் மற்ற ப்ராக்களை விட பருத்தி ப்ராக்களை அணிகிறீர்கள் என்றால் ஆறு மாதங்களுக்கு அப்புறம் நீங்கள் உங்கள் ப்ராக்களை மாற்ற  வேண்டும். ஸ்ட்ராப் இல்லாத ப்ரா அல்லது பால்கனெட் ப்ரா அதுவும் சில  தடவை தான் அணிந்துள்ளீர்கள் என்றால் அவை கண்டிப்பாக ஒரு வருடத்திற்கு வரும்.

Avatar
Avatar

Latest posts by Editorial Desk (see all)

BraPantiesNightwearActivewear

CLOVIA
© 2024 Clovia.com. All Rights Reserved.